விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல துணைத்தலைவர் ஆரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிளைத் தலைவர் செல்வக்குமார், செயலாளர் முருகேசன், துணை செயலாளர் தயனேஸ்வரன், பொருளாளர் பச்சையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.