districts

img

விமான நிலையம், தி.நகரில் முன்பதிவு ஆட்டோ நிறுத்தங்களை அமைத்திடுக!

சென்னை, நவ. 24 - சென்னை விமான நிலை யம், தி.நகர் பனகல் பார்க்  பகுதிகளில் முன்பதிவு (ப்ரீ  பெய்டு) ஆட்டோ நிறுத்தங் களை அமைக்க வேண்டும் என்று ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆட்டோ அண்டு டாக்சி  ஓட்டுநர் சங்கத்தின் 17வது மாவட்ட மாநாடு ஞாயிறன்று (நவ.24) கிண்டியில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், விமான நிலையத்திற்குள் ஆட்டோக்களை அனுமதி அளிக்க வேண்டும், அரசு பொது மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், திரை யரங்குகள் போன்றவற்றில் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும். முத்தரப்பு குழு அமைக்க வேண்டும். சட்டவிரோதமாக செயல் படும் ஓலா, உபேர், ரேபிடோ  இருசக்கர வாகன சேவை யை தடை செய்ய வேண்டும். சிறு குற்றங்களுக்கு ஓட்டு நர் உரிமம் பறிப்பதை கைவிட வேண்டும், சாலை போக்குவரத்து மற்றும் பாது காப்பு மசோதா 2019 அமலாக் கத்தை கைவிட வேண்டும், ஆர்டிஓ அலுவலகத்தில் ஆன்லைன் நடைமுறை யால் ஏற்படும் காலதாமதம், அதன்பேரில் நிகழ்த்தப் படும் லஞ்ச ஊழலை தடுக் வேண்டும். பெட்ரோலிய பொருட்க ளின் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும், தின சரி 5 லிட்டர் எரிபொருளை மானிய விலையில் தர வேண்டும். இலவச ஜிபிஎஸ்  மீட்டரை வழங்க வேண்டும். நலவாரிய ஓய்வூதியத்தை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங் குவது போன்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் வீடுகட்ட 4  லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மீட்டர் கட்ட ணத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஆட்டோக்களுக் கான செயலியை அரசு உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஜெ.முகமது அனீபா தலைமை தாங்கி னார். சிஐடியு கொடியை மாவட்டச் செயலாளர் ஏ.ஜான் ஏற்றினார். துணைப் பொதுச்செயலாளர் சி.வெள்ளக்கண்ணு வர வேற்க, துணைப்பொதுச் செயலாளர் என்.பாபு அஞ் சலி தீர்மானத்தை வாசித் தார். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன தலைவர் வி.குமார் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை மாவட்ட பொதுச்செயலாளர் இ.உமாபதியும், வரவு செலவு அறிக்கையை பொரு ளாளர் ஏ.பக்கிரியும் சமர்ப்பி த்தனர். சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சிவாஜி மாநாட்டை வாழ்த்திப் பேசி னார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் நிறை வுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி.ஞான பிரகாஷ் நன்றி கூறினார்.