விழுப்புரம்,டிச.13- விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அதை 2014 - 19ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் புதுப்பிக்கத் தவறியவா?கள், தங்களது பதிவை 2022 மா??ச் 1-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ளலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- தமிழக அரசு 2014 முதல் 19ஆம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில், தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அரசாணை எண்.548-இன்படி, சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் 3 மாதங்களுக்குள், அதாவது மார்ச் 1-ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்புத் துறையின் இணைய தளத்தின் மூலம் தங்களது பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம். 2014 முதல் 19ஆம் ஆணடு வரையிலான காலகட்டத்தில் புதுப்பிக்கத் தவறி மீண்டும் பழைய பதிவுமூப்பின்றி புதிதாக பதிவு செய்தவர்களும், மீண்டும் பழைய பதிவை பெறும் வகையில் புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலொ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்தும் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம் என ஆட்சியர் மோகன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.