districts

img

சி.எஸ்.சுப்பிரமணியம் மெய்யறிவு கல்வி நிலையம்

கோபிசெட்டிபாளையம், மே 31 - கோபிசெட்டிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சி.எஸ்.சுப்பிரமணியம் மெய்யறிவு கல்வி நிலைய திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் து.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டம், கோபியில் மார்க்சிய கல்வி மையத்திற்காக புதிதாக  கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சி.எஸ்.சுப்பிர மணியத்தின் நினைவாக கட்டப் பட்டுள்ள இந்த அரங்கத்தின் திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு சிபிஐ மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் தலைமை வகித்தார். கட்டடம் மற்றும் சி.எஸ்.சுப்பிர மணியத்தின் திருவுருவச்சிலையை, சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா திறந்து வைத்தார். கே.சுப்பராயன் எம்பி., கொடியேற்றினார். முன்னாள் எம்எல்ஏ கோ.பழனிசாமி கல்வெட்டுகளை திறந்து வைத்தார். சிங்காரவேலர் நூலகத்தை டி.எம்.மூர்த்தி திறந்து வைத்தார். சிஎஸ் மலரை முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம், ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து து.ராஜா பேசு கையில், தியாகசீலர் சி.எஸ். சுப்பிர மணியம் மெய்யறிவு கல்விநிலையத்தை திறந்து வைத்ததில் பெருமை கொள் கிறேன். கம்யூனிஸம் வெறும் அரசியல் சித்தாந்தம் மட்டுமல்ல, அரசியல் கொள்கைகள் மட்டும் அல்ல, கம்யூனி சம் என்பது பண்பாடு, அறநெறி. புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் தன்னலம்  கருதாமல் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்ந்து செயல்படுபவர் நல்ல கம்யூனிஸ்ட் ஆவார். புறவாழ்க்கையிலும் அகவாழ்க்கை யிலும் கம்யூனிஸ்ட் அறநெறிகளை, பண்பாடுகளை உயர்த்தி பிடித்தவர் தியாகசீலர் சி.எஸ்.சுப்பிரமணியம் ஆவார் கோபியில் மார்க்சிய மெய்ய றிவு கல்வி நிலையம் தோற்றுவிக்கப் பட்டுள்ளது. உலகில் மக்கள் அனை வருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே மார்க்சியம். மக்க ளை சுரண்டல் கொடுமையில் இருந்து விடுவிப்பது, மக்கள் அனைவரும் ஒன்று தான் என்ற பண்பாட்டை உருவாக்குவது என்பது இன்று இந்தியாவில் பெரும் பிரச்சனையாக உள்ளது. பேசும் இடம்  கோபிசெட்டிபாளையம் ஆக இருந்தா லும் பெரியார் ஈன்றெடுத்த மண் தமிழ்நாடு என்று எடுத்துக் கொண்டால் பெரியாரின் கொள்கைகள் வளர்ந்து ஓங்கி நிற்கின்றது.  பெரியார் மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூக சீர்திருத்தம், பெண்ணுரிமை என  அரும்பாடுபட்டவர். அதேபோல் அம்பேத்கரின் கொள்கைகள் உயர்ந்து வேரூன்றி வளர்ந்து நிற்கின்றது. அம்பேத்கரின் கொள்கை என்பது சாதிய கட்டமைப்பை வேரோடும் மண்ணோ டும் தகர்த்தெறிய வேண்டும் என்பதாகும்.  அதே போல் பெரியாரின் கொள்கை களான மூடப்பழக்க வழக்கங்களை நிராகரித்து அறிவார்ந்த முறையில் பிரச்சனைகளை அணுக வேண்டும். பெரியார், அம்பேத்கரின் கொள்கை களை ஏற்றுக் கொண்டவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வர்க்க பேதங்கள் ஒழிய வேண்டும். எல்லோரும் எல்லாம் பெற  வேண்டும். சாதி பேதம் இல்லாத இந்தியா வை உருவாக்க வேண்டும். சாதி பேதம் என்பது இந்திய நாட்டின் தனித்துவமான பிரச்சனையாக உள்ளது. சாதி பேதம் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். இதை கம்யூனிஸ்ட் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதை முன் கொண்டு செல்ல இந்த கல்வி நிலையம் பயன்பட வேண்டும்.  பாஜகவின் பிடியில் இருந்தும் மத வெறியின் பிடியிலிருந்தும் நாட்டை காப்பாற்றப்பட வேண்டியது உள்ளது. பிரிட்டிஷ் பிடியிலிருந்து விடுபட கம்யூ னிஸ்ட் களம் கண்டது. இன்று பாஜக பிடியிலிருந்து காப்பாற்ற கம்யூனிஸ்ட் களம் கண்டு முன்னிலையில் நிற்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு கள் நாலாம் தேதி  பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். இந்திய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

;