கடலூர்,ஜன.13- கடலூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவி லான டி20 கிரிக்கெட் போட்டி அண்ணா விளை யாட்டு மைதானத்தில் தொடங்கியது. சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்க டேஷ் தலைமை தாங்கினார். சென்னை ராமேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் கலந்து கொண்டு போட் டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கடலூர், நெல்லிக் குப்பம், பண்ருட்டி, நெல்லிக் குப்பம், சிதம்பரம், நெய்வேலி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாவட்ட கிரிக்கெட் சங்கத் தில் பதிவு செய்திருக்கும் 16 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் காலை 8.30 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு நடக்கிறது. நாக் அவுட் முறைப்படி இந்த போட்டிகள் வருகிற 20 ஆம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது. இதற் கான ஏற்பாடுகளை கிரிக் கெட் சங்க செயலாளர் கூத்தர சன் செய்து வருகிறார்.