districts

img

ராமநாதபுரம் பள்ளியில் முட்புதர்களை அகற்றிய சிபிஎம் ஊழியர்கள்

சென்னை, ஜூலை 22-

    சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4 ஆவது வார்டு ராமநாதபுரத்தில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது.  

   பள்ளியின் கழிவறையில் அடைப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களிடம் தெரிவித்தார். அங்கு வந்த ஊழியர்கள் செடிகள் அடர்ந்து புதர்போல் மண்டிக் கிடக்கிறது. செடிகளை அகற்றி கொடுத்தால் நாங்கள் அடைப்பை சரி செய்து கொடுக்கிறோம் எனக் கூறிவிட்டு ஊழி யர்கள் சென்று விட்டனர்.

   பின்னர் இதுகுறித்து மாநகராட்சி தூய்மைப் பணி ஆய்வாளரிடம் தெரிவித்த போது, முட்புதர்களை அகற்ற வய தான பெண் ஊழியர்களை அனுப்பி வைத்தார். இதனால் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், பகுதி குழு உறுப்பினர்கள் வெங்கட்டையா, அலமேலு, கிளைச் செயலாளர் குமார், கிராம சங்கத்தின் செயலாளர் சுரேஷ் ஆகியோர் ஊழியர்களுடன் இணைந்து மண்டிக் கிடந்த புதரை அகற்றினார்கள். இது பொதுமக்களிடமும், பெற்றோர் களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.