districts

img

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு சிபிஎம் புகழஞ்சலி கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவையொட்டி திங்களன்று (அக்.3) சென்னை கேரள சமாஜத்தில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர் டி. கே. ரங்கராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக செய்தி தொடர்பாளர்  டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைசெயலாளர் நா. பெரியசாமி,  காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வபெருந்தகை, மதிமுக முன்னணி தலைவர் அந்திரிதாஸ், சிபிஎம் மத்திய கட்டுப்பாடு குழுத் தலைவர் ஏ. கே. பத்மநாபன், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாவட்டச் செயலாளர்கள் எல். சுந்தரராஜன், ஆர். வேல்முருகன், ஜி. செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவையொட்டி திங்களன்று (அக்.3) கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.