கிருஷ்ணகிரி, டிச. 5- கிருஷ்ணகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநாடு ஊத்தங்கரையில் கே.வரதராஜன் நினைவரங்கில் டிச 3, 4 தேதிகளில் நடைபெற்றது. தேன்கனிக்கோட்டை தியாகி ஆதித்ய வர்தன்ஸ்ரீ நினைவு கொடி மரத்தை கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ஸ்ரீவாசன் வழங்க, செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜி.சேகர் பெற்றுக்கொண்டார். மாவட்டக் குழு உறுப்பினர் எத்திராஜ் கொடிக்கயிறு வழங்க, பாஞ்சால ராஜன் பெற்றுக்கொண்டார். ஓசூர் தியாகி சக்திவேல் நினைவு ஜோதியை ஓசூர் மாநகர குழு செயலாளர் சி.பி. ஜெயராமன் வழங்க,செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி பெற்றுக்கொண்டார். கல்கேரி தோழர் சுரேஷ் நினைவு ஜோதியை தளி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் வழங்க, செயற்குழு உறுப்பினர் இருதயராஜ் பெற்றுக்கொண்டார்.
அஞ்செட்டி தோழர் ஸ்ரீராமன் நினைவு ஜோதியை வட்ட செயலாளர் தேவராஜன் வழங்க, செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி பெற்றுக்கொண்டார். முதுபெரும் தோழர் காளியப்பன் மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்தார். நூல் வெளியீடு தோழர் நன்மாறன் நினைவு புத்தக கண்காட்சியை சேதுமாதவன் துவக்கி வைத்தார். தீக்கதிர் சென்னை பதிப்பு முன்னாள் பொறுப்பாசிரியர் சு.பொ.அகத்தியலிங்கம் தொகுத்த “வசந்தத்தின் இடிமுழக்கம்’’ புத்தகத்தை மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் ஆகியோர் வெளியிட்டனர். செயற்குழு உறுப்பினர் சுரேஷ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வரவேற்புக் குழு செயலாளர் மகாலிங்கம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் மாநாட்டை துவக்கிவைத்துப்பேசினார்.
வட்ட செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன் வேலை அமைப்பு அறிக்கை, சமர்ப்பித்தார்.செயற்குழு உறுப்பினர் சாம்ராஜ் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாவட்டத்தில் முறைகேடாக இயங்கிவரும் ஜல்லி கிரஷர்கள், கல் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்தும், கல்குவாரி, மற்றும் சுற்றுச்சூழல் வரையறைகள் முறையாக பின்பற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி கேஆர்பி அணை கட்டுவதற்காக 1952 ல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு சூளகிரி வட்டத்தில் மறுகுடியமர்த்தப்பட்ட 16 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, மலைப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் 15 கிராம பழங்குடி மலைவாழ் இருளர் மக்களுக்கு பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி விவசாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டம் நடைபெற்றது. அதன் காரணமாக மாவட்ட ஆட்சியரும் வட்டாட்சியர் ஒப்புக்கொண்டபடி பட்டாக்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.