districts

img

கீரப்பாளையத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், டிச.21- கீரப்பாளையம் ஒன்றியத்தில் சேதமடைந்த குளங்களை தூர்வார வேண்டும், வடஹரிராஜபுரம் கிராம மக்களுக்கு  100 நாள் வேலை வழங்க வேண்டும். புதுநகர் குடியிருப்புக்கு நிரந்தர வெள்ள தடுப்பு  ஏற்படுத்தி தரவேண்டும், கீரப்பாளையம் எம்ஜிஆர் சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் செல்லையா தலைமை தாங்கினார்.  மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சோமசுந்தரம், முருகன். கலியபெருமாள், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், ஜெயந்தி, செம்மலர், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தர்மதுரை, வாசுதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;