districts

img

எம்பி, எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத சமுதாய கூடங்கள்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் 2006-2011 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பேரணாம்பட்டு சாலை மாட்டுச் சந்தை அருகே சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதற்கு விடுதலைப் போராட்ட வீரர் தியாகி ‘பகத்சிங்’ பெயரிடப்பட்டது.  ஏழை-எளிய மக்களின் குடும்ப நிகழ்வுகளுக்கு குறைந்த வாடகையில் இடம் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு கலைஞர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது இந்த கட்டிடம். இதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சிபிஎம் கட்சி போராட்டம் நடத்தியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், இதுவரைக்கும் திறக்கப்படவில்லை. தற்போது இந்த சமுதாயக் கூடத்தை பிளாஸ்டிக் குப்பைகளை பிரிக்கும் கிடங்காக நகராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி கூறு கையில், “ ஏழை மக்களின் நலனுக்காக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது இந்த சமுதாயக் கூடம். அதை திறந்து பயன்பாட்டுக் கொண்டு வரவேண்டிய அதிகாரிகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்காமல் இருப்பது, அதை தற்போது வேறு ஒரு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வது எவ்விதத்திலும் பொருத்தமல்ல. ஏழை மக்கள் நலன் கருதி மாவீரன் பகத்சிங்கின் பெயரிடப்பட்ட இந்த சமூகநல கூடத்தை நவீனப்படுத்தி உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார். அதேபோன்று குடியாத்தம் ஒன்றியம் மூங்கப்பட்டு ஊராட்சி காத்தாடி குப்பத்தில் சிபிஎம் மாநி லங்களை உறுப்பினர்  டி.கே.ரங்க ராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் விவசாயிகள், தொழி லாளர்கள் நலனுக்காக கட்டிக் கொடுத்த சமுதாயக்கூடம் இது வரை திறக்கப்படாமல் உள்ளது. அதேபோல் குடியாத்தம் ஒன்றியம் கொண்ட சமுத்திரம் ஊராட்சியில் நியூ பார்க் டவுன் பாலிடெக்னிக் ரோட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் இதுவரை திறக்கப்படவில்லை.  இதற்கு காரணம், திருமண மண்டபம் உரிமையாளர்கள் தலையீடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர், முதல மைச்சர் உடனடியாக தலை யிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி மூன்று சமுதாய நலக் கூடங்கங்களும் மக்க ளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

;