districts

img

மருத்துவக் காப்பீட்டில் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்-லிகாய் கோரிக்கை

 வேலூர், டிச. 17- அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) வேலூர் கோட்ட செயற்குழு கூட்டம் கோட்டத் தலைவர்   ம.அன்பரசி ஜூலியட் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில  பொருளாளர் கே.தாமோத ரன், கோட்ட பொது  செயலாளர் தா.வெங்க டேசன், பொருளாளர் பி.மணி, அகில இந்திய  பொதுக்குழு உறுப்பினர் கள் எஸ்.ரமேஷ் என்.வெங்கடாசலம், மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். முகவர்க ளுக்கு உள்ள மருத்துவக் காப்பீட்டில் குளறுபடிகளை சரி செய்து பணமில்லா முறையை அமல்படுத்த வேண்டும். முகவர்களுக்கு சம்வர் தன், சுவாலமன் திட்டங்க ளில் பிடித்தம் செய்த தொகையை திரும்பப் பெருவதில் முகவர்களுக்கு  உள்ள சிரமங்களை நீக்க வேண்டும் முகவர்களுக்கு போனஸ் கமிசன் பெற வழி வகை செய்திட வேண்டும். புதிய பாலிசி பத்திரங்கள் முகவர்களின் தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும்,

முகவர்கள் பயிற்சி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிரமங்களை சரி செய்திட வேண்டும், அனைத்து கிளைகளிலும் மன்ற உறுப்பினர்கள் அடங்கிய பெயர் பலகை வைத்திட வேண்டும், இறப்பு உரிமை கோருதல் புதியதாக உருவாக்கப்பட்ட நடைமுறையை நீக்கி பழைய நடைமுறையை பின்பற்றிட வேண்டும். மன்ற முகவர்களுக்கான நேர்காணல் நடைபெறும் தகவல்களை காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் முகவர்களுக்கு தெரிய படுத்திட வேண்டும், மாதா மாதம் முகவர்களுக்கு அனைத்து கிளைகளிலும் காப்பீடு நிலுவை தொகை பட்டியலை வழங்க வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கோரிக்கைகளாக எல்ஐசி வேலூர் முதுநிலை கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனுவாக அளித்தனர்.

;