பொன்னேரி, டிச. 5- பள்ளி மாணவர்களின் பயணம் பாதிக்கப்படுவதால், மீஞ்சூர்- பொன்னேரி இடையே நெடுஞ்சாலை யில் கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதித்து வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை, வல்லூர் அனல் மின் நிலையங்கள், காம ராஜர், அதானி, எல்என்டி ஆகிய துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன, இந்த நிறுவனங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்வ தால், மீஞ்சூர், பொன்னேரி இடையே செல்லும் திருவொற்றியூர் நெடுஞ்சா லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சாலைகள் குண்டும் குழிகள் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படு கின்றன. மேலும் இந்த வாகன நெரி சலால் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவியர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வரு கின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமூக நல அமைப்புகள் சார்பில் மனுக்கள் அளித்தும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாணவர்களின் பெற்றோர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதன் அடிப்படையில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் செல்வம் தலைமையில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன், போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் வடிவேல் முருகன், சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் ஆகியோர் ஆலொசனை நடத்தினர் அதன் அடிப்படையில் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் மீஞ்சூரில் இருந்து பொன்னேரி மார்க்கமாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்லதடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் இந்த விதி முறைகள் ஞாயிறன்று (டிச5) முதல் அமலுக்கு வரும் என வருவாய் கோட்டாட்சியர் செல்வம் தெரிவித்தார்.