நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளையும், பெருவாரியான நகராட்சி, பேரூராட்சிகளை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கைப்பற்றியது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் இல்லத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஏ.பிரியதர்ஷிணி உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., வெற்றியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.