districts

img

அருந்ததியர் சடலம்: பொது வழியில் அனுமதிக்க மறுப்பு

திருவண்ணாமலை, ஜன. 17- திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே வீரளூர் அருந்ததியர் காலனி மக்கள் வடகரை நம்மியந்தல் மாதா  கோவில் வழியாக பிணத்தை எடுத்துச் சென்று  அடக்கம் செய்வது வழக்கம். இதற்காக சுடுகாட்டுப்பாதை அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று(ஜன.16) ஒரு பெண் உயிரிழந்தார். தற்போது அந்த சுடுகாட்டு பாதை சரியில்லை என்பதால், கிராமத்திற்குள் செல்லும் பிரதான சாலை வழியாக (பொது பாதை) பிணத்தை எடுத்து  செல்ல முடிவு செய்திருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர், பிரதான சாலை வழியாக பிணத்தை எடுத்து செல்லக் கூடாது என்ற னர். மேலும் அருந்ததியர் காலனி பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகளை ஒரு பிரிவினர் அடித்து சூறையாடினர். 30க்கும் மேற்பட்ட வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.  . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, ஆரணி உதவி ஆட்சியர் கவிதா, கலசபாக்கம் வட்டாட்சியர் ஜெகதீசன் உள்ளிட்ட அரசு  அலுவலர்கள், காவல் துறையினர் இருதரப்  பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையில் தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர்  ப.செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூளிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் டி.கே.,வெங்கடேசன், கே.கே.வெங்கடேசன், வழக்கறிஞர் முருகன், வேடியப்பன், விவசாயிகள் சங்க நிர்வாகி சிவக்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத் திற்கு சென்று வன்முறையால் பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்தனர். பிறகு,  காவல்துறை வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வீரளூர் கிராமத்தில் அருந்ததிய மக்கள் சுடுகாட்டு பாதை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு, கடந்த 2021 செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அருந்ததிய மக்கள்  மயான பாதைக்கு பொது வழியை பயன் படுத்தலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டது.  ஆனாலும், வீரளூர் கிராமத்தில் தொடர்ந்து வன்முறை சம்பவம் காவல்துறை யினர் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. பிரச் சனைக்குறிய இடத்தில் அமைதிக்கூட்டம் நடத்தியது தவறான நடவடிக்கையாகும். வன்முறையில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட வர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். வன்முறை சம்பவம் நடந்த போது அதை  தடுக்கத் தவறிய காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அருந்ததியர் காலனி மக்கள் மயான பாதைக்கு பொது  வழியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.  பாதிக்கப்பட்ட அருந்ததியர் இன  மக்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். அந்த  பகுதியில் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆதி தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமானும் கண்டம் தெரிவித்திருக்கிறார்.