வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை இழிவுபடுத்தி கேலிச்சித்திரம் வெளியிட்ட ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தியை கண்டித்து ஞாயிறன்று (டிச.5) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர்.