districts

முதியவருக்கு சிக்கலான அறுவை சிகிச்சை

சென்னை, டிச. 16- பல்வேறு கூட்டு நோய்களுடன்தீவிர இதய பாதிப்புக்கு உள்ளான 78வயது நபர்  சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சையால் காப்பாற்றப்பட்டார்.   இம் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்  பாபு தலைமையிலான இதய மருத்துவர்கள் குழு,  எண்பது வயது நிரம்பிய நோயாளிக்கு உயிர் காக்கும் தீவிர அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தது. பல்வேறு கூட்டு இதய நோய் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் ்பட்ட நோயாளிக்கு 3 மணி நேரம் நடைபெற்ற சிக்கலான ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சையில் ரத்த நாளங்களிலுள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு 4 ஸ்டெண்ட்கள் பொருத்தப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அந்த  நோயாளி,  பல்வேறு  நோய்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். நுரையீரல் தசை அழற்சி காரணமாக நோயாளிக்குச் செயற்கை சுவாசக்  கருவி பொருத்தப்பட்டது. நோயாளியின் இதய குருதிக் குழாயை அல்ட்ரா ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு இதயக் குருதிக் குழாய்க்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைத் தடுக்கும் இதய இரட்டை ரத்த தமணி நோய்  இருப்பது உறுதியானது.  இதயத்துக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்ல, பிடிசிஏ  எனப்படும் இரத்த நாளங்களின்  அடைப்பை நீக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு 4 ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்டன. 

;