விழுப்புரம்,டிச.17- விழுப்புரம் மாவட்டம், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றி திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படு வதாக பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகள் கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் அதன் உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்திலொ,தொழுவத்திலொ மாடுகளை பராமரித்திட வேண்டும் என கடந்த 20.10.2021 மற்றும் 21.11.2021 அன்று மாட்டின் உரிமையாளர்களுக்கு விழுப்புரம் நகராட்சி வாயிலாக அறிவிப்பும், விழிப்புணர்வும் வழங்கப்பட்டு வரு கிறது. அரசின் அறிவிப்புகள் மாட்டின் உரிமையாளர் கள் பின்பற்றாமல் இருக்கும் பட்சத்தில் காவல் துறை, வருவாய்துறை உதவியுடன் நகராட்சி பணியாளர்கள் மூலம் கால்நடைகள் கைப்பற்றப்பட்டு நகராட்சி பூங்கா வில் பாதுகாப்பாக பராமரிக்கப்படும், சம்பந்தப்பட்ட கால்நடை யின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முதன் முறையாக ரூ.5 ஆயிரம் அபராதத்தினை மூன்று நாட்களுக்குள் செலுத்த உறுதிமொழி ஆவணம் சமர்பிக்க, மாடுகளை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மாட்டின் உரிமையாளர்கள்; மாடுகளை பெற்றுக் கொள்ளவில்லை யெனில் நகராட்சிக்கு அருகில் உள்ள கால்நடை சந்தையில் விற்பனை செய்து அத்தொகையை நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தெரிவித்துள்ளார்.