districts

img

ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் திருக்கோவிலூரில் சிஐடியு-தீஒமு போராட்டம்

கள்ளக்குறிச்சி, மே 21 - தொழிலதிபரின் காரை முந்திச்சென்ற தற்காகஆட்டோ ஓட்டுநரை சாதி சொல்லி பேசியதோடு கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிஐடியு சார்பில் திருக் கோவிலூர் பேருந்து நிலையம் எதிரில்  திங்க ளன்று(மே.20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவி லூரைச் அடுத்த தாசர் புறத்தை சேர்ந்த ஆட்டோ தொழிலாளி மணிமாறன் என்பவர்  திருக்கோவிலூர் நகரில் டி.கே.டி. பெட்ரோல் பங்க் உரிமையாளர் டி.கே.டி.முரளி யின் காரை முந்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது தொழிலதிபர் முரளி தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்து மணி மாறனை நடுரோட்டில் அடித்து இழுத்துச் சென்று முரளிக்கு சொந்தமான பெட்ரோல்  பங்கில் அடைத்து வைத்து அடித்து சித்திர வதை செய்துள்ளனர். மணிமாறன் பட்டியல் இனத்தவர் என்பதை தெரிந்த உடன் அந்த  கும்பல் அவரை  முட்டி போட வைத்து காலில்  விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்லி கொடூரமாக தாக்கியுள்ளது. மேலும் மணி மாறனின் ஆட்டோவை அடித்து நொறுக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக முரளி மற்றும் அவரது அடியார்கள் மீது புகார் கொடுத்து அவர்களின் மீது வழக்கு மட்டும் பதிவு செய்துள்ள காவல்துறையினர்நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்த கொடூர சாதியவன்கொடுமை தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும்  தொழிலதிபர் டி.கே.டி.முரளி உள்ளிட்ட அனைத்து குற்ற வாளிகளையும் கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும், தாழ்த்தப்பட்ட  ஆட்டோ தொழிலாளி மணிமாறன் மற்றும் அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பும் நிவாரணமும் வழங்கிட வேண்டும் என்று  சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் கொட்டும் மழை யும் பொருட்படுத்தாமல் கண்டன உரை யாற்றினார். இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைதலைவர் ஜி.ஆனந்தன், சிபிஎம் மாவட்ட செயலாளர்  டி.எம்.ஜெய்சங்கர், விச மாவட்ட தலைவர் டீ.ஏழுமலை, மாவட்ட செயலாளர் பி.சுப்பிர மணியன்,சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.செந்தில், மாவட்ட செயற்குழு வி.சாமி நாதன்,ததீஒமு நிர்வாகி வே.ஏழுமலை, டிஒய்எப்ஐ மாவட்ட தலைவர் மு.சிவ குமார், கே.சீனிவாசன், இ.செல்வம், பி.ஏழு மலை, எஸ்.சேகர், ஏ.லூயிசாமேரி, இ.அல மேலு, பி.தெய்வீகன், கே.கந்தசாமி, வி.முரு கன், கே.பாஸ்கர், கே.ஹரி உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

;