districts

img

சிஐடியு போராட்டம் வெற்றி புதுக்கோட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 41 விழுக்காடு சம்பள உயர்வு

புதுக்கோட்டை, ஜூலை 2 -

    புதுக்கோட்டை நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு 41 விழுக்காடு சம்பள உயர்வு வழங்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது சிஐடியு சங்கம் நடத்திய போராட் டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

    புதுக்கோட்டை நகராட்சி யில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படுவ தில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.  இவர்களின் ஊதிய உயர்வுக்காக வும், வேறு சில கோரிக்கைகளுக்காக வும் சிஐடியு தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தி வந்துள்ளது.

    இந்நிலையில், ஊதிய உயர்வு  கேட்டு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

      இதனைத் தொடர்ந்து நிர்வாகத்தின் சார்பில் நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், துணைத் தலைவர் லியாகத் அலி  மற்றும் அதிகாரிகள் சிஐடியு மாவட்டச் செயலாளர் அ.ஸ்ரீதர், புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் கே.முகமதலிஜின்னா, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் முத்தையா உள்ளிட்டோருடன் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

     பேச்சுவார்த்தையில், தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.460, ஓட்டுநர்களுக்கு ரூ.547 ஊதியம் வழங்குவது. இஎஸ்ஐ, பிஎப், காப்பீடுகளுக்கான தொகை களை நிர்வாகமும், தொழிலாளியும் இணைந்து செலுத்துவது. ஊதி யத்துடன் கூடிய விடுப்பு வாரத்தில்  இரண்டு அரை நாட்கள் வழங்கு வது என எழுத்துப் பூர்வமான உடன்பாடு ஏற்பட்டது. ஊதிய உயர்வு என்பது ஏற்கெனவே அவர்கள் வாங்கி வந்த ஊதியத்தி லிருந்து 41 விழுக்காடு கூடுதலாகும்.

   இதுகுறித்து உள்ளாட்சித் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் கே.முகமதலி ஜின்னா கூறுகையில், “இது சிஐடியு சங்கம் நடத்திய தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி யாகும். மேலும், பண்டிகை கால  முன்பணம் உள்ளிட்ட இதர கோரிக் கைகளையும் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூல மாக வென்றெடுப்போம்” என்றார்.

;