districts

img

சிஐடியு தென்சென்னை மாவட்ட மாநாடு தொடங்கியது

சென்னை, செப்.24- நிரந்தர பணியில் உள்ள வர்களை  முறைசாரா தொழி லாளர்களாக ஆட்சியாளர் கள் மாற்றி வருகின்றனர் என்று சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் கூறினார். சிஐடியு தென்சென்னை மாவட்ட 15வது மாநாடு சனிக்கிழமையன்று (செப்.24) தோழர்கள் இ.தினமணி, எம்.பாண்டி யன் நினைவரங்கில் தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலா ளர் எஸ்.கண்ணன் பேசிய தன் சுருக்கம் வருமாறு:- 44 தொழிலாளர் நலச் சட்டங்களில் 29 சட்டங்களை ஒன்றுமில்லாமல் செய்து விட்டனர். 15 சட்டங்களை 4  தொகுப்புகளாக மாற்றி யுள்ளனர். 100 தொழிலா ளர்களில் 94 பேர் முறைசாரா தொழிலாளர்களாக உள்ளனர். இந்த தொழி லாளர்களின் சமூக பாது காப்பு குறித்து 4 சட்ட தொகுப்புகளில் எதுவும் குறிப்பிடவில்லை. கொரோனா காலத்தை பயன்படுத்தி மோடி அரசு  முதலாளிகளுக்கு ஏராள மான சலுகைகளை வழங்கி யது. தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு, சமூக பாது காப்பை பறித்து வருகிறது. ஆட்சியாளர் கடைபிடிக்கும் நவ தாராளமயக் கொள் கையே இதற்கு காரணம். உதாரணமாக, தொலை தொடர்பில் 2ஜி, 3ஜி, 4ஜி என  தலைமுறை அதிகரிக்க அதிகரிக்க நிரந்தர தொழி லாளர்களின் எண்ணிக்கை குறைந்து, முறைசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றனர்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய மாக 600ரூபாய் வழங்க  கேரள இடது முன்னணி  அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால், தமிழக அரசு அத்தகைய  சட்டத்தை கொண்டுவர மறுக்கிறது. தாராளமய மாக்கல் கொள்கையை கடைபிடிக்கும் அரசுகள் தொழிலாளர் உரிமைகளை மறுக்கின்றன. நிரந்தர தொழிலாளர் கள் வாரம் 48 மணி நேரம்  வேலை செய்வதை 4  நாட்களில் செய்யவும், எஞ்சிய 3 நாட்களை முறை சாரா தொழிலாளர்களாக பணியாற்ற திட்டம் வகுக்கின் றனர். எனவே, முறைசாரா தொழிலாளர்களை திரட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் இ. பொன்முடி தலைமை தாங்கினார். சங்க கொடியை  மூத்த தலைவர் எஸ். அப்பனு  ஏற்றினார். துணைச் செயலா ளர் எஸ். விஜயா வரவேற் றார். அஞ்சலி தீர்மானத்தை துணைத்தலைவர் மா.விஜயகுமார் வாசித்தார். வேலை - அமைப்பு அறிக்கையை மாவட்டச்  செயலாளர் பா.பால கிருஷ்ணனும், வரவு செலவு  அறிக்கையை ஏ.பழனியும் சமர்ப்பித்தனர்.

;