districts

கல்பாக்கத்தில் சிஐடியு பிரச்சாரம்

காஞ்சிபுரம் மக்களவைத்  தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வத்தை ஆதரித்து கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பேருந்து நிலையத்தில் சிஐடியு சார்பில் பிரச்சாரக் கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் க.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநில செயலாளர் இ.முத்துக்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, திருக்கழுக்குன்றம் பகுதி செயலாளர் எம்.குமார், திமுக ஒன்றிய செயலாளர் ஏ.சரவணன், சிஐடியு நிர்வாகிகள்  ரபிக், ராமமூர்த்தி, அழகேசன் உள்ளிட்ட பலர் பேசினர்.