districts

img

முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு

சென்னை, டிச.7- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த  பலத்த மழையின் காரண மாக தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்த தால் வரதராஜபுரம் பி.டி.சி.குடியிருப்பு பகுதிகள் மகாலட்சுமி நகர், இரும் புலியூர் டி.டி.கே.நகர், வன்னி யன்குளம், முடிச்சூர் அமுதம் நகர் பகுதிக ளில் ஏரித்தண்ணீர் பெருக் ்கெடுத்து ஓடியது. வெள்ளம் பாதித்த பகுதி களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்டு வெள்ளத்தை வடிய வைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து மழைநீரை வடிய வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் எந்த அளவுக்கு மழைநீர் வடிந்துள்ளது. என்னென்ன வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்றுள்ளன என்பதை கண்டறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வா யன்று மீண்டும் அங்கு  சென்று ஆய்வு மேற்கொண் ்டார். இரும்புலியூர் டி.டி.கே. நகர், வன்னியன்கு ளம் பகுதிக்கு சென்று அங்கு நடைபெற்றுவரும் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டார். அதன்  பிறகு முடிச்சூர் ஊராட்சி யில் அமுதம் நகர் பகுதியில் நடைபெற்ற வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டார். இதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வரதராஜ புரம் டிடிசி குடியிருப்பு பகுதிக்கு சென்று பார்வை யிட்டார். அந்த பகுதியில் மகா லட்சுமி நகர் மேம்பா லம் பகுதியில் நீர்வளத் ்துறையால் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட வெள்ளத் தடுப்பு பணிகளை பார்வை யிட்டார்.

;