districts

img

சென்னைக்கான மூன்றாவது மாஸ்டர் பிளானை உருவாக்க திட்டம்

சென்னை, டிச.13- மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் கட்டுமானத் துறையின் பங்கு 18.3 விழுக்காடாக உள்ளதாகவும்  , நிலங்கள் மற்றும் கட்டிடங்களைப் பதிவு செய்வதன் மூலம் பெரும் வருவாய் தமிழகம் ஈட்டித் தருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (கிரெடாய்) தமிழ்நாடு பிரிவு சார்பில் சென்னையில் திங்களன்று (டிச.13) நடைபெற்ற “தமிழக கட்டுமானத்துறையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வை’’ என்ற மாநாட்டில் அவர் பேசியதாவது: தமிழக அரசு  செப்டம்பரில் மட்டும் நில ஆவணங்களை பதிவு செய்ததன் மூலம் ரூ.5973 கோடி  வருவாய் ஈட்டியுள்ளது.கடந்த ஆண்டை விட நவம்பர் மாதத்தில் புதிய கட்டிடங்களின் பதிவு 17 சதவீதம் அதிகரித்துள்ளது. கட்டுமானத் துறை புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் கட்டுமானச் செலவு குறையும்,  கட்டுமானத் தொழிலுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

சென்னைக்கான திட்டம்

சென்னைக்கான மூன்றாவது மாஸ்டர் பிளானை உருவாக்குவதன் மூலம், வெள்ளத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், ஒவ்வொரு முறையும் ஏற்படும் பிற குடியிருப்பு பிரச்சனைகைளை களைவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் மாநிலத்தில் எதிர்கால வீடுகள் தொடர்பான அனைத்து திட்டங்களையும் மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெகா தொழிற்பேட்டை

சென்னை பட்டினப்பாக்கத்தில் மெகா தொழிற்பேட்டை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறோம். கோயம்பேடு ஒருங்கிணைந்த சந்தை, பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், சாத்தங்காடு இரும்புச் சந்தை ஆகியவற்றை உலகத் தரத்துக்கு உயர்த்தத் திட்டமிடப்பட்டுளோம்.இன்னும் 10 ஆண்டுகளில் ஏழை எளிய மக்களுக்கு 9.5 லட்சம் வீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த விழாவில் ரியல் எஸ்டேட் துறையின் நிலை குறித்த அறிக்கையையும் முதல்வர் வெளியிட்டார். இதில் வீட்டுவசத்துறை அமைச்சர் எஸ் முத்துசாமி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி,  க்ரெடாய் தமிழ்நாடு தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

;