சென்னை,பிப்.23- கோவை மாவட்டம், டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிக்கமுத்தி செட்டில்மெண்ட் பகுதியில் வசித்து வந்தவர் ராஜ் குமார். மனைவி மஞ்சு (39). இவர்களுக்கு மூன்று மகன், ஒரு மகள் உள்ளனர். ஆனமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட யானைகள் முகாமில் 16 ஆண்டுகள் தற்காலிகமாக வும் அதன்பிறகு, 5 வருடம் நிரந்தரமாகவும் 21 வருடம் யானை பாகனாகவும் ராஜ் குமார் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 2 அன்று, அவருடன் வேலை பார்க்கும் யானை பாகன் சந்திரன் என்பவர் வனத் துறை அலுவலர் வரச் சொன்னதாக ராஜ்குமாரை அழைத்து சென்றார். பின்னர் இரண்டு நாட்களாகி யும் அவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை யடுத்து, ராஜ்குமார் மனைவி மஞ்சு காவல்துறை யில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, மாயதுரை என்ற இடத்தில் ராஜ்குமார் இருப்பதாக டிசம்பர் 5 அன்று வனத்துறை அலுவலர் தகவல் கொடுத்தார். இதையடுத்து, காவல்துறை யினருடன் மஞ்சு மாய துரைக்கு சென்றார். அங்கு அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது கணவர் ராஜ்குமார் தான் என்பதை உறுதி செய்துள்ளார். உடனே மர்ம்மான இறப்பு குறித்து சந்திரன் மற்றும் டாப்சிலிப் பகுதியை சேர்ந்தசிலரிடம் காவல்துறையினர் விசா ரணை நடத்தினர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப் பிரிவில் பிப்.22 அன்று ராஜ்குமார் மனைவி மஞ்சு, தனது கணவர் மரணத்தில் தொடர்புடைய குற்றவாளி களை கண்டுபிடித்து கைதுசெய்யக்கோரி மனு அளித்தார். அதில், தனது கணவரை விஜயன், அருண்,வெங்கடேஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளதாகவும் இதை, சந்திரன் காவல்துறை யினரிடம் வாய்மொழியாக வாக்குமூலம் அளித்துள்ள தாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். எனவே, முதலமைச்சர் தலையிட்டு தங்களது குடும்பத்திற்கு நீதி கிடைக்கவும் குற்ற வாளிகளை கைது செய்ய வும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் வலியுறுத்தி யுள்ளார்.