districts

img

அரசு பொதுத் தேர்வுகளில் சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

சிதம்பரம், மே 22-

   சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2022 - 23 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வு எழுதிய மாணவி கிருத்திகா 500க்கு 492 மதிப்பெண்களும், மாணவிகள் கார்த்திகா மற்றும் ஹரிணி 490 மதிப்பெண்களும், அபிராமி. பால குழலினி ஆகியோர் 489 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

   மேலும் இப்பள்ளி 99.1 விழுக்காடு தேர்ச்சியை பெற்றுள்ளது. மேலும் குறிப்பிட்ட பாடங்களில் 16 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 11-ஆம் வகுப்பில் மாணவி அபிராமி 600 க்கு 576 மதிப்பெண்களும், மாணவர்கள் சபரிராஜன் 573 மதிப்பெண்களும், வெங்கட் ராமன் 569 மதிப்பெண்களும் பெற்றனர். மேலும் 4 மாண வர்கள் குறிப்பிட்ட பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

   12 ஆம் வகுப்பு தேர்வில் மாணவி யுவபாரதி 600 க்கு 585 மதிப்பெண்களும், தில்லைநாயகி 582 மதிப்பெண்களும், ஹரி கிருஷ்ணன், அபர்ணா ஆகியோர் 578 மதிப்பெண்களும் பெற்றனர்.  இதில் 26 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    12 ஆம் வகுப்பு தேர்விலும் இப்பள்ளி மாணவர்கள் 99.5 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ள னர்.  தேர்வில் சாதனை படைத்த மாணவர்களையும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை பள்ளி தாளாளர் குமார், முதல்வர் ரூபியல் ராணி, துணை முதல்வர் அறிவழகன் ஆகியோர் பாராட்டி பரிசு கோப்பைகளை வழங்கினர். இதில் சரோஜா வேலுசாமி பெற்றோர்கள் கலந்து கொண்டனர். புகைப்பட கலைஞர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சங்கத்தின் சார்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு வெற்றி கோப்பை வழங்கினர்.