districts

சென்னை முக்கிய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை: ஆட்சியர் தகவல்

திருவள்ளூர், ஜூலை 10- திருவள்ளுர் மாவட்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறை  மூலமாக, விவசாயிகளுக்கு ரு.2.62 கோடி பயிர்காப்பீடு இழப்  பீட்டு தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்திருக்குப்பு வருமாறு:- திருவள்ளுர் மாவட்டத்தில் கடந்த 2016-2017, 2017-2018,  2018-2019 மற்றும் 2019-2020 ஆம் ஆண்டுகளில் பிரதமர் பயிர்  காப்பீடு திட்டத்தில் சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்தி ருந்த 3,429 விவசாயிகள் இழப்பீட்டுத் தொகை பெற தகுதி யான விவசாயியாக இருந்தும், அவர்களின் வங்கிக் கணக்கு  எண், பெயர் வங்கி குறியீட்டு எண் மற்றும் வங்கிக் கிளை ஆகிய விபரங்கள் பயிர் காப்பீடு இணையதளத்தில் தவறுத லாக  பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, இழப்பீட்டு தொகை வழங்க  இயலாமல் இருப்பது குறித்து காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து விவசாயிகளின்  விபரங்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலம் விவசாயிகள் மற்றும் வங்கிகளிடையே சரிபார்த்து விடுபட்டிருந்த  3,429 விவசாயிகளில் இதுவரை 1,141 நபர்களுக்கு ரூ. 11.1527 கோடி  பயிர் இழப்பீட்டுத் தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது 2017-2018 ஆம் ஆண்  டில் ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு காப்பீட்டு நிறுவனத்திடம் பயிர்  காப்பீடு செய்திருந்த 1,404 விவசாயிகளுக்கு ரு.2.33 கோடி  இழப்பீட்டு தொகையும், 2019-2020 ஆம் ஆண்டில் ஓரியண்டல்  காப்பீட்டு நிறுவனத்திடம் பயிர் காப்பீட்டு செய்திருந்த 98 விவ சாயிகளுக்கு ரு.0.29 கோடி இழப்பீட்டு தொகை என மொத்தம்  1,502 விவசாயிகளுக்கு ரூ.2.62 கோடி இழப்பீட்டு தொகை நேரடியாக விவசாயிகளுடைய வங்கி கணக்கில் வரவு வைக்  கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டை மீறிய பாஜகவினர்

கைது செய்ய உத்தரவிட்ட ஆட்சியர்

கரூர், ஜூலை 10- தமிழக பாஜக மாநிலத் தலைவராக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதையடுத்து பாஜகவின் கரூர் மாவட்டம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலைய ரவுண் டானா பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலை வர் கே.சிவசாமி தலைமை வகித்தார்.  கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெடி  வெடித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமை யாக முடங்கியது. அப்போது அவ்வழியே வந்த மாவட்ட ஆட்சி யர் த.பிரபுசங்கர், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், எப்படி பட்டாசு வெடிக்கலாம் என்றும், அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்குமாறும் போலீசாரிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ராதா கிருஷ்ணன், கீதாஞ்சலி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பாஜக மாவட்டத் தலைவர் கே.சிவசாமி, மாநில பிரதி நிதி வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்டோரை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். மேலும் தள்ளமுள்ளு ஏற்பட்டது. இதை யடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி  வைத்தனர். மேலும் இது தொடர்பாக கரூர் நகர காவல்நிலை யத்தினர் ஊரடங்கு காலத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியது உள்பட 5 பிரிவுகளின் கீழ் மாவட்டத் தலைவர் சிவ சாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிந்துள் ளனர்.

வேரோடு சாய்ந்த மரம்

தூத்துக்குடி, ஜூலை 10- தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதன் காரணமாக,  கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்க ளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு  மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி யில் சனிக்கிழமை பிற்பகலில் மேக மூட்டத்துடன்  பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி - பாளை., சாலை பாலி டெக்னிக் கல்லூரி அருகே உள்ள சாலையோரத்தில் நின்ற  வேப்பமரம் சூறைக்காற்றில் வேரோடு சாய்ந்து விழுந்தது.  இதையடுத்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்க டேஷ், தீயனைப்பு நிலைய விரர்கள் விரைந்து வந்து மரத்தினை  அப்புறப்படுத்தினர். 

புகையிலை பாக்கெட்டுகள்  பறிமுதல்: 10 பேர் கைது

தூத்துக்குடி, ஜூலை 10- தூத்துக்குடி நாசரேத் காவல் நிலைய எல்லைக்  குட்பட்ட பகுதியில் புகையிலைப் பொருட்களை காரில்  கடத்திய பணிக்க நாடார் குடியிருப்பு மேற்கு தெருவைச்  சேர்ந்த மகேஸ்வரன்(38) என்பவரிடமிருந்து 47 கிலோ மதிப்பு டைய 3900 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல்  செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், முத்தை யாபுரம், கோவில்பட்டி மேற்கு, காடல்குடி, எட்டயபுரம் மற்றும்  மெஞ்ஞானபுரம் ஆகிய 8 காவல் நிலைய போலீசார் தங்கள்  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ப னைக்காக வைத்திருந்த 10 பேரை கைது செய்தனர்.  மொத்தம் 4065 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்  யப்பட்டன. இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

மின் ஊழியர் தற்கொலை

திருநெல்வேலி, ஜூலை 10 - சேர்வலாறு மலையில் உள்ள மின் வாரிய குடி யிருப்பில் வசித்து வந்தவர் வள்ளிமுருகன் (45). இவர்  சேர்வலாறு மின் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து  வந்தார்.  இவர் வெள்ளிக்கிழமை தனது குடியிருப்பில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எதற்காக  தற்கொலை செய்தார் என தெரியவில்லை.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
 

;