districts

சென்னை முக்கிய செய்திகள்

4 மாதங்களுக்கு பின் பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்கள்

சென்னை, ஆக. 2- சென்னையில் 4 மாத காலத்துக்குப் பின், அரசு மற்றும்  உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்க ளும் திங்களன்று (ஆக. 2) பணிக்கு திரும்பினர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆசிரியர்  கள் பள்ளிகளுக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டிருந்தது. தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்க ஆலோசித்து வரும் நிலையில், பள்ளி வளாகம், வகுப்பறை களை தயார் செய்தல், கற்றல் – கற்பித்தல் பணிகளை தீவிரப்  படுத்துதல் போன்ற பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக 4 மாத காலத்துக்குப் பின், அரசு மற்றும் உதவி  பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும்  திங்களன்று பள்ளிகளுக்கு திரும்பினர். வரும் 6ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் வழியாக அலகுத் தேர்வு நடத்தப்பட உள்ள  நிலையில், அதற்கான பணிகளையும் ஆசிரியர்கள் மேற் கொள்ள உள்ளனர்.

சென்னையில் மருத்துவரிடம் நூதன கொள்ளை

அண்ணாநகர், ஆக. 2- சென்னை அண்ணாநகர் 3ஆவது பிரதான சாலையில் வசிப்பவர் மருத்துவர் சாந்தினி பிரபாகர். இவரது செல் போனுக்கு கடந்த 24ஆம் தேதி குறுந்தகவல் ஒன்று வந்துள்  ளது. அதில் உங்கள் சிம் கார்டு காலாவதி ஆகிவிடும் என்று  குறிப்பிடப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட எண்ணுக்கு தொடர்பு  கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை நம்பி சாந்தினி பிரபாகர் அந்த எண்ணில் தொடர்பு  கொண்டார். அப்போது குறிப்பிட்ட செயலியை கூறி ரூ.10ஐ  அனுப்பி வைக்குமாறு மர்ம நபர் கூறியுள்ளார். இதை நம்பி  அவர் 10 ரூபாய் அனுப்பியதும், அவரது வங்கிக் கணக்கில் இருந்து  2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிபோய் உள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து அண்ணாநகர் சைபர்கிரைம் காவல் துறையில் புகார் அளித்  தார். சென்னையில் மீண்டும் நடந்துள்ள இந்த நூதன மோச டிச் சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரும்பு தோட்டத்தில் தீ: 1.5 ஏக்கர் பாதிப்பு

கடலூர், ஆக.2- கடலூர் அருகே உள்ள மேற்கு ராமாபுரத்தைச் சேர்ந்தவர்  வீரமணி. முனீஸ்வரன் கோயில் பகுதியில் கரும்பு விவசாயம்  செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவில் அவரது  தோட்டத்தில் தீ பிடித்து எரிவதை அதேப் பகுதியைச் சேர்ந்த  கணபதி என்பவர் பார்த்து தகவல் தெரிவித்ததோடு, தீய ணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை  அணைத்தனர். எனினும், 1.50 ஏக்கர் கரும்பு தீயில் கருகியது.  மேலும் சொட்டு நீர் பாசன கருவிகளும் சேதமடைந்தது. இது குறித்து, காவல்துறை விசாரணையில், மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்  பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்தது.

 

;