districts

அரிசி கடையை உடைத்து திருட்டு

பொன்னேரி,ஜூலை 7-  

     மீஞ்சூர் பஜார், வேளாளர் தெருவில் அரிசி கடை நடத்தி வரும் சுரேஷ் என்பவர் வியாழனன்று இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடை மூடிவிட்டு சென்றார். காலையில் கடையில் வேலை செய்து வரும் முருகன் என்பவர் கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது.