விழுப்புரம், ஜூலை 2-
மேல்பாதி கோவில் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோட்டா ட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கோலிய னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்பாதி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த தர்மராஜா திரௌபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக கடந்த 7.4.2023 அன்று ஆதிக்க சாதியினர் மற்றும் பட்டியலின் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதுதொடர்பாக விழுப்புரம் கோட் டாட்சியராலும், மாவட்ட ஆட்சியராலும் 5முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் சுமூக முடிவுகள் எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த 25.5.2023 அன்று கோட்டாட்சியர் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையிலும் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதையடுத்து சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்கும் வகையிலும், பொது அமைதியை நிலை நாட்டும் வகையிலும் அக்கோவி லுக்குள் இரு தரப்பினரும், அவர்களை சார்ந்தவர்களும் செல்லக்கூடாது என்று கூறி கடந்த 7.6.2023 அன்று கோட்டாட்சியரால் அக்கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இரு தரப்பி னரையும் தங்கள் தரப்பு ஆவணங் களை தாக்கல் செய்ய விசாரணைக்கு அழைக்கப்பட்டது. அதன்பேரில் கடந்த மாதம் 9-ந் தேதியன்று இரு தரப்பின ரும், விழுப்புரம் கோட்டாட்சியர் அலு வலகத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ததோடு எழுத்துப்பூர்வமாக விளக்கத்தையும் சமர்பித்தனர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் விழுப்புரம் கோட்டாட் சியர் பிரவீனாகுமாரி நோட்டீசு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் பிரச்சினை தொடர் பாக இரு தரப்பினரிடமும் மீண்டும் விசாரணை செய்யப்பட வேண்டி யுள்ளதால் வருகிற 7-ந் தேதி (வெள்ளி க்கிழமை) காலை 11 மணியளவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசார ணைக்கு ஆஜராகி தங்கள் தரப்பு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை உரிய ஆவணங்களுடன் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் வழக் கறிஞர் உதவியை நாடிக்கொள்ள லாம். மேலும் நியாயமான முகாந்திரம் இல்லாமல் அன்றைய தினம் விசார ணைக்கு ஆஜராகாமல் புறக்கணித் தாலோ அல்லது மறுத்தாலோ ஆஜ ராவதை கட்டாயப்படுத்த பிடிக்கட் டளை ஒன்று பிறப்பிக்கப்படும் என்று இதன் மூலம் எச்சரிக்கை செய்யப்படு கிறது. இவ்வாறு அதில் அவர் கூறி யுள்ளார்.