திருவனந்தபுரம்,மார்ச் 9- கேரள பாஜக மாநிலச் செயலாளர் ஏ.கே.நசீர் அக்கட்சியில் இருந்து வில கினார். சிபிஎம்முடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந் தன் சால்வை அணிவித்து அவரை வரவேற்றார். சிறுபான்மை மோர்ச்சா வின் தேசியப் பொறுப்பா ளராக இருந்த நசீர், கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவில் பணியாற்றி வந்தார். இவர் பாஜக மருத்துவ லஞ்ச ஊழல் தொடர்பான விசா ரணை ஆணையத்தில் உறுப்பினராக இருந்தார். விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த பின், பா.ஜ.க, அதை முற்றிலும் புறக்க ணித்தது என்று ஏ.கே.நசீர் கூறினார்.