கவிஞரேறு வாணிதாசனின் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் திங்களன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி, லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.