சென்னை,மே9- சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக பைக் டாக்சிகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஓலா, உபர், ரேப்பிடோ போன்ற நிறுவனங்களின் பெயரில் பைக் டாக்ஸிகள் பயன்படுத்துபவர்களின் எண்ணி க்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. பைக் டாக்சிகளில் 50 முதல் 60 ரூபாய் குறைந்தபட்ச கட்டணம் வசூலிப்பதால் மக்கள் பைக் டாக்சிகளை உபயோ கிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இதுவரை பைக் டாக்சிகளுக்கு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.