திருவள்ளூர், டிச.19- டூவீலர் பைக் டாக்சியை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசியதை திரும்பபெறக்கோரியும் திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (டிச.19), கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணை பொதுச் செயலாளர் ஜெ.ஆனந்தன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.கரிமுல்லா, செயலாளர் எம்.சந்திரசேகரன், கைத்தறி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சூரியபிரகாஷ், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.அர்ஜுனன், துணை நிர்வாகிகள் பரமசிவம், சந்தானம், சந்திரன், வேலு ஆகியோர் பேசினர்.