districts

img

சட்ட விரோத செயல்களை அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்க முயற்சி ஒன்றிய அரசு மீது பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு

சென்னை, செப். 22- சட்ட விரோத செயல்கள் அனைத்தையும், அரசியலமைப்பு சட்டம் அங்கீகரித்ததாக மாற்றும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் இதை நீதிமன்றங்கள் வேடிக்கை பார்ப்பதாகவும் மாநில சிறு பான்மையினர் ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் குற்றம் சாட்டினார்.  இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்’ எனும் தலைப்பில் சனிக்கிழமையன்று (செப்.17) சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் என்.ஜி.ஆர்.பிரசாத் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். தமிழ்நாடு - பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரும், சங்கத்தின் மாநில செயல் தலைவருமான ஏ.கோதண்டம் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் என்.முத்து அமுதநாதன் வரவேற்றார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) எச்.என்.நாக மோகன்தாஸ், சங்கத்தின் நிர்வாகி பாண்டீஸ்வரி உறுதிமொழியை வாசித்தார். அகில இந்திய இணைச் செயலாளர் கே.இளங்கோ, பொருளாளர் சிவக்  குமார், சென்னை மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.
எஸ்.பீட்டர் அல்போன்ஸ்
இந்த கருத்தரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், இந்தியாவில் 85 விழுக்காடு மக்கள் வாழ்க்கைக்கு சமூக பாதுகாப்பு இன்றி உள்ளனர். 35 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். இந்த பெரும்பான்மையினரை, அதானி, அம்பானி போன்ற சிறு பான்மையினரிடமிருந்து பாது காக்க வேண்டும். அரசின் நிதி ஆதாரங்கள், இயற்கை வளங்களை இந்த சிறுபான்மையினர் கொள்ளை யடிக்கின்றனர். இதனை மறைக்க மத, மொழி, சமூக சிறுபான்மையினர் பிரச்சனையை எழுப்புகின்றனர். விவசாய குடும்பத்தை சேர்ந்த வர்கள் நீதிபதிகளாக மாறும் நிலையை அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கியது. அந்த அரசிய லமைப்பு சட்டம் வழங்கிய உரிமை கள் களவு போய்க்கொண்டு இருக் கிறது. அரசியல் சாசன சட்டம் தோற்றுப்போனால், அது சட்டத்தின் தவறு அல்ல. அதை அமல்படுத்துகிறவர்களின் தவறு என்றார் அம்பேத்கர். பெரும்பான்மை எடுக்கும் முடிவுகள் எல்லாம் நியாய மானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, அரசிய லமைப்பு சட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து வழக்கறிஞர்கள் பேச வேண்டும். ஆட்சி அதிகாரத்தால் இருப்ப வர்கள் தவறு செய்வார்கள் என்று தெரிந்தேதான் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அதேசமயம், தவறு செய்தவர்களை தண்டிக்கும் அதிகாரத்தை நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டது.

அதை நீதிமன்றங்கள் சரியாக செய்தால் தவறுகள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஆனால், நீதித்துறைக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குடிமகனுக்கு இருக்கக் கூடிய ஒரேவாய்ப்பு நீதிமன்றம். நீதிமன்ற கதவுகள் திறக்கவில்லை என்றால் சாமானியனின் நிலை என்ன? தமிழகத்தில், வீட்டிற்குள் ஜெபம் செய்ய முடியாத நிலை உரு வாகி உள்ளது. கல்லறைகளில் அடக்கம் செய்ய முடியவில்லை. மசூதி களுக்கு வெள்ளை அடிக்க முடிய வில்லை. ஞானவாபி மசூதி வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. புதிய புதிய நகரங்கள் உருவாகி உள்ள இடத்தில், 500 வருடத்திற்கு முன்பு என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்? தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா பெயரே நமக்கு தெரியவில்லை. குடும்பத்தின் வரலாறே தெரியாதபோது, 500 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்? இந்த வழக்கை நீதிமன்றம் எப்படி ஏற்றது? 1947ல் வழிப்பாட்டு தலங்கள் (பாபர் மசூதி தவிர) எப்படி இருந்ததோ அப்படியே இருக்க வேண்டும் என்ற சட்டத்திற்கு முரணாக இந்த வழக்கு உள்ளது. இதனால் சமூகத்தில் வெறுப்புதான் ஏற்படும். அரசியல் கட்சிகள் இல்லாமல் ஜன நாயகம் செயல்பட முடியாது. அரசி யல் கட்சிக்கு எப்படி நன்கொடை வரு கிறது என்ற தெளிவு இல்லாமல் ஜன நாயகம் எப்படி செயல்பட முடியும். ஒவ்வொரு கட்சியை பற்றிய புரிதலும், தெளிவும் வாக்காளர்களுக்கு தெரிய வேண்டாமா? ஜனநாயக நாடுகளில் இல்லாத ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அந்த சட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதை விசாரிக்க நீதிமன்றத்திற்கு நேரமில்லை.

தேர்தல் வந்ததும் ஆயிரக்கணக்கான கோடி தேர்தல் பத்திரங்களை ஸ்டேட் பேங்க் விற்கிறது. அதற்கு முதல்நாள் லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்கிறார்கள். இந்த தள்ளுபடிக்கும், நன்கொடைக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா? என தெரிய வேண்டாமா? கோவாவில் 3 ஆண்டுகளில் 3 முறை காங்கிரஸ் எம்எல்ஏக்களை எட்டு, எட்டுபேராக கூட்டி சென்றுள்ளார்கள். இதில் நீதிமன்றம் தலையிட வேண்டாமா? அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானதை அனைத்தையும், அரசியலமைப்பு சட்டம் அங்கீகரித்ததாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதில் நீதிமன்றங்கள் ஏன் தலையிட மறுக்கின்றன. இயற்கை வளங்கள், அரசின் வருவாய் யாருக்கு சொந்தம்? ஏழை களுக்கு இடஒதுக்கீடு சரியானது. ஏழை என்பவர் யார்? வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்தானே ஏழை கள். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளேவர்க ளுக்குதானே 10 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்திருக்க வேண்டும். மாறாக, 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள் என்று கூறிவிட்டு, அதில் பிசி, எஸ்சி, எஸ்டி வரமாட்டார்கள் என்றால், இதுகுறித்து வழக்கறிஞர்கள் பேச வேண்டாமா? இந்திய வரலாற்றில் தற்போது நிலவும் நெருக்கடி இதற்கு முன்பு வந்ததில்லை. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி வைத்துள்ள ஜன நாயக அமைப்புகளும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. அமெரிக்காவில் டிரம்ப் 4 நீதி பதிகளை நியமிக்கிறார். அதன்பிறகு ஆட்சி மாற்றம் நிகழ்கிறது. பைடனுக்கு எதிராக செயல்படும் படி டிரம்ப் சொன்னதை, நீதிபதிகள் கேட்க மறுத்துவிட்டனர். அட்டானி ஜெனரலே அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்பட முடியாது என்று கூறிவிட்டனர். இதுதான் ஜனநாயக அமைப்புகளின் வலிமை. எனவே, ஜனநாயக அமைப்புகளையும், அரசியலமைப்பு சட்டத்தையும் பாது காப்போம்.

;