districts

img

சிபிஎம் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழு அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை கண்டித்து புதனன்று (ஜூலை 19) சிந்தாதிரிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் ஆர்.கபாலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, வே.ஆறுமுகம், பகுதிக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், அன்பா, அருண்குமார் மற்றும் குணசீலன், ஏழுமலை உள்ளிட்டோர் பேசினர்.