வேலூர், நவ 25 - வேலூரில் நகர அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கலைஞரின் சிறப்பு புகைப்பட கண்காட்சியினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா சிறப்பு மலரை அமைச்சர் துரைமுரு கன் வெளியிட, அமைச்சர்கள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விரிவாக்கம் துறை சு.முத்துசாமி, உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அர.சக்கர பாணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆர்.காந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மலரை வெளியிட்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், கலைஞர் தொட்ட சிகரத்தை வேறு எவராலும் தொட முடியாது. அரசி யல், சினிமா. இலக்கியம் ஆகிய துறைகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார் என்றார். பண்பாடு மிக்கவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர், சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்ற சட்டம் கொண்டு வரவும், மாநில சுயாட்சிக் காக முழங்கியவர், வங்கிகள் தேசிய மயமாக்க காரணமாக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கூடுதல் செயலாளர் மலர்விழி, மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், மக்களவை உறுப்பினர் து.மு.கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமுலு விஜயன், ெஜ.எல்.ஈஸ்வரப்பன், அ.செ.வில்வநாதன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.