districts

கபாலீசுவரர், வடபழனி கோவில்களில் வியாழக்கிழமை முதல் தமிழில் அர்ச்சனை

சென்னை, ஆக. 2-   தமிழில் அர்ச்சனை செய்ய இனி அர்ச்ச கர்களை தேட வேண்டாம். கோவிலில் தமி ழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெய ரும், செல்போன் எண்ணும் அறிவிப்பு பல கையில் வெளியிடப்பட்டிருக்கும். கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். அவ்வாறு  அர்ச்சனை செய்யப்படும்போது அர்ச்ச கர்கள் சமஸ்கிருதத்தில் வேதமந்திரங்களை உச்சரிப்பார்கள். இது சமஸ்கிருதம் தெரி யாத பக்தர்களுக்கு புரிவதில்லை. இதனால் கோவில்களில் தமிழில் அர்ச்  சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது.  இதற்காக கோவில்களில் ஏற்பாடுகள் செய்தி ருந்தாலும் முறையாக நடைபெறுவது கிடை யாது. தற்போது அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழில் அர்ச்சனை  செய்யும் முறையை தீவிரப்படுத்தி இருக்கி றார். அவரது உத்தரவுப்படி வரும் வியாழக்  கிழமை (ஆக. 5) முதல் கோவில்களில் தமி ழில் அர்ச்சனை செய்வது தொடங்குகிறது.

சென்னையில் வடபழனி முருகன் கோவில், கபாலீசுவரர் கோவில், திருவான்மி யூர் மருந்தீஸ்வரர் கோவில், நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவேற்காடு கரு மாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சி யம்மன் கோவில் ஆகிய கோவில்களில் தமிழிலும் அர்ச்சனை நடைபெறும். இந்த கோவில்களுக்கு சென்று தமிழில் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் இனி  அர்ச்சகர்களை தேட வேண்டாம். கோவிலில்  தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயரும், செல்போன் எண்ணும் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டிருக்கும். அந்த எண்ணுக்கு அழைத்து தமிழில் அர்ச்சனை செய்து கொள்ளலாம். இந்த வசதி தமிழகத்தில் உள்ள முது நிலை கோவில்களான ராமேசுவரம், திருச் செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி நெல்லையப்பர், மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம், அழகர்கோவில், பழனி,  மருதமலை, திருத்தணி, திருவானைக் காவல், திருவண்ணாமலை உள்ளிட்ட 47 கோவில்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் கோவில்களில் குறைகள் இருந்தால் ஆன்லைனில் பக்தர்கள் புகார்  செய்யலாம். 15 நாட்களுக்கு ஒருமுறை புகார்  கள் அனைத்தும் இணை ஆணையர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.