ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் எம். எஸ். தரணிவேந்தன், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மக்களவைத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மு. பிரியதர்ஷினியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், விசிக மத்திய மாவட்ட செயலாளர் வளர்மதி, காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் பிரசாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் டி.எம். பீர்முகமது மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.