சென்னை, டிச. 9- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் பணி நீக்கம் செய்யப்படும் அவல நிலை தொடர்கிறது. இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு திடீரென 10 ஊழியர்களை பணிநீக்கம் செய்து, அந்த இடத்தில் வேறு நபர்களை பணி நியமனம் செய்துள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அதிகாரி களிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த தாமஸ் என்ற தொழிலாளி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அவரை மீட்டனர். இந்த தகவல் அறிந்த சக தொழி லாளர்கள் மண்டல அலுவலகத்தில் திரண்டு உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாவட்டச் செயலா ளர் ஆர்.ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆகியோர் மண்டல அலுவலர், சுகாதார மண்டல அலுவலர்களை சந்தித்து பேசினார். அப்போது பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். அடை யாள அட்டை வழங்க வேண்டும், அநாகரீக வார்த்தைகளால் அதிகாரிகள் பேசக்கூடாது என வலியுறுத்தினர். பணி நீக்கம் செய்யப் பட்ட அனைவருக்கும் வேலை வழங்க மண்டல அலுவலர் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.