districts

img

டிராக்டர் டிரைலருக்கு ஒப்புதல் அவசியமில்லை: உயர்நீதிமன்றம்

சென்னை, டிச. 10- ஒன்றிய அரசின் ஒப்புதல்  இன்றி, டிராக்டர் டிரைலர் ்களை பதிவு செய்ய வேண்டு மென தமிழக போக்கு வரத்து துறைக்கு சென்னை  உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. விவசாய பயன்பாட்டிற் ்கான டிராக்டர் டிரைலர் ்களை ஈரோட்டை சேர்ந்த சக்தி விநாயகா இன்ஜினியரிங் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ஒன்றிய மோட்டார் வாகன திருத்த விதிகளில், டிராக்டர் டிரைலரை ஒன்றிய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற  வேண்டும் என கூறப்பட்டுள் ளது. அதன்படி, தங்கள் நிறுவனம் தயாரிக்கும் டிரை லர்களை ஒப்புதலுக்காக விண்ணபித்தபோது, அந்த இணையதளத்தில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நடைமுறை தமிழ கம் தவிர பிற மாநிலங்களில் நிறுத்தி வைத்துள்ளதால், தமிழகத்திலும் டிராக்டர் டிரைலரை ஒன்றிய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற தேவையில்லை என உத்தரவிடக் கோரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி  ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், ஒன்றிய அரசின் இணைய தளத்தில் ஒப்புதல் பெறாமல் வாகனத்தை பதிவு செய்ய முடியாது என்றும், ஒப்புதல் பெறுவதில் தாமதமா கிறது என்பதற்காக அது  இல்லாமல் பதிவு செய்யும் ்படி கோர முடியாது என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங் ்களை கேட்ட நீதிபதி, மோட்டார் வாகன இயந்திரத்தால் இயங்கும் டிராக்டருக்குதான் இணையதள பதிவு கட்டாயம் என்றும், டிரை லரை மோட்டார் வாகன மாக கருத முடியாது எனக்கூறி, டிரைலர்களை இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெறத்  தேவையில்லை என்றும், ஒன்றிய அரசின் இணைய தளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெறாமல் டிரைலர் ்களை பதிவுசெய்ய போக்கு வரத்து துறைக்கு உத்தர விட்டு வழக்கை முடித்து வைத்தார்.

;