கள்ளக்குறிச்சி, மார்ச் 10 - கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா தேவபாண்டலம் கிராமத்தில் 1975 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்கப் பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இது போல் வழங்கப்பட்ட மனை களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது. அதன் விளை வாக 2021 ஆம் ஆண்டில், சிபிஎம் சட்டமன்ற குழுத் தலை வர் நாகை மாலியின் கோரிக்கையை ஏற்று மனைகளை அளவீடு செய்து பட்டா வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டார். அதன் அடிப்படை யில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தேவபாண்ட லம் கிளை சார்பில் 6.5.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சங்கராபுரம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 90 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. தொடர் போராட்டம் நடத்தி அரசின் கவனத்திற்கு சென்று பட்டா பெற்றுக் கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும் ஒன்றிய கவுன்சிலருமான ச.சசி குமார், ஒன்றிய செயலாளர் எஸ்.சிவாஜி, பாண்டலம் கிளை பொறுப்பாளர் கே.பாஸ்கர் ஆகியோருக்கு கிளைச் செயலாளர் எம். முருகேசன், தலைமையில் கிராம மக்கள் பாராட்டு விழா நடத்தினார். இதில் ஜி. மணிமாறன், கே.சக்திவேல், கொசப்பாடி கிளைச் செய லாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.