districts

அண்ணாமலைப் பல்கலை. தொலைதூர கல்விக்கு விண்ணப்பம் விநியோகம்

சிதம்பரம், ஆக.5-

     சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி இயக்கக 2023-24 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் ராம.கதிரேசன் குத்துவிளக்கேற்றி வைத்து  விண்ணப்பத்தை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைவேந்தர் கூறியதாவது:-

     சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி 2015 லிருந்து 2021 வரை சேர்ந்து பயின்ற மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டு 2023 மார்ச் மாதம் தொலைதூரக் கல்வி இயக்கக படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல் குழுவுக்கு விண்ணப்பித் திருந்தோம். அந்த  வகையில் சென்ற மாதம் வழிகாட்டுதல் குழு ஆய்வு செய்து  தற்போது 2023 முதல் 27 பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு கள் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது.

    மேலும் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு ஒப்புதல் வேண்டியதில்லை என்பது, சுமார் 125 பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கம் இந்த ஆண்டு முதல் சேர்க்கை  துவங்கியுள்ளது. 125 படிப்புகளில்  27 பட்டப் படிப்பு  மற்றும் பட்ட மேற்படிப்பு அனுமதி பெற்று நடத்தப்படு கிறது.

    98 சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் பல்கலைக்கழகம் முன் வந்து அறிமுகப்படுத்தியுள்ளது. ஆக 4 ஆம் தேதி முதல் பல்கலைக்கழக படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

     அடுத்த வாரத்திலிருந்து பல்கலைக்கழக வலைதளத்தி லிருந்து தொலைதூரக் கல்வி இயக்கம் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து  விண்ணப்பிக்கலாம். தொலைதூரக் கல்வி இயக்கத்தில் பிஎட்  பட்டப்படிப்பு தொடங்க இந்த ஆண்டு என்சிடிஇ அனுமதி வேண்டி உள்ளதால், இந்த ஆண்டு விண்ணப்பித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையான அனுமதி பெற்று தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

     12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் தொடங்க வாய்ப்பு உள்ளதால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் மொத்தம் 55 படிப்பு மையங்களில் விண்ணப்பங்கள் பெறலாம். மாணவர்கள் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி தேதியாகும்.

   இவ்வாறு அவர் தெரிவித்தார்.