தீபாவளியை விபத்தில் இல்லாமல் பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்த சிதம்பரம் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் சார்பாக, வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டிய முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் நிறுவனர் குமார் தலைமை தாங்கினார். முதல்வர் ரூபியல் ராணி மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.