districts

img

ஆம்பூர் நகர மன்ற தலைவர் தேர்வு

ஆம்பூர், மார்ச்.27 - ஆம்பூர் நகர்மன்றத் தலைவராக ஏஜாஸ் அகமது தேர்வு செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி மற்றும் உதயே ந்திரம் பேரூராட்சிதலைவர் துணைத் தலைவர் தேர்தல் சனிக்கிழமையன்று (மார்ச் 26) நடைபெற்றது. ஆம்பூர் நகர்மன்றத் தலைவராக 16ஆவது வார்டு திமுக உறுப்பினர் ஏஜாஸ் அஹ்மத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக 11ஆவது வார்டு உறுப்பினரும்,  திமுக நகரச் செயலாளருமான எம். ஆர். ஆறு முகம் தேர்வு செய்யப்பட்டார். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தலைவராக 8ஆவது வார்டு திமுக உறுப்பினர் பூசாராணி  வெற்றி பெற்றார். 14ஆவது வார்டு திமுக உறுப்பினர் கோவிந்தராஜ் துணைத் தலைவ ராக வெற்றி பெற்றார்.