அகில இந்திய பார்வையற்றோருக்கான செஸ் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான செஸ் போட்டியில் அம்பத்தூர் சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.சாம்பெணியல் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றார். அதையொட்டி பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேது குமணன் மாணவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கி பாராட்டினார். இதில் முதல்வர் எஸ்.பி.செல்வகுமார், தேசிய பார்வையற்றோருக்கான சங்க நிர்வாகிகள் எழில், சந்திரசேகர், தீப்தி பாட்டியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.