சென்னை,ஜன.5- ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டிசி) சார்பில் பல விமான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. தற்போது சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்தமானுக்கு சிறப்பு சுற்றுலா திட்டமிட்டுள்ளது. வருகிற 23-ந்தேதி புறப்படும் இந்த சுற்றுலா 6 நாட்களை கொண்டதாகும். ஹேவ்லாக், நீல், போர்ட் பிளேர் ஆகிய இடங்களை சுற்றி பார்ப்பதற்கான கட்டணம், தங்கும் விடுதி, உணவு, கப்பல் கட்டணம், விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, பயண காப்பீடு அனைத்தையும் உள்ளடக்கிய கட்ட ணம் ஒருவருக்கு ரூ.51,500 ஆகும். இந்த தகவலை சுற்றுலா மேலாளர் மாலதி ரத்தி னம் தெரிவித்துள்ளார்.