சென்னை, செப்.10 தமிழ்நாட்டில் தற்கொ லையால் பாதிக்கப்பட்ட வர்களை ஆதரிப்பதற்கான ஒரு மனிதாபிமான திட்டத்தை ரோட்டரி இன்டர் நேஷ்னல் 3232 மாவட்டம் தொடங்கியுள்ளது. ரோட்டரி ரெயின்போ திட்டம் என்ற அந்த திட்டம் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதர வளிக்கிறது. கோயம்புத்தூர் ஆயுதப்படையின் காவல ரான காளிமுத்து கடந்த ஜூலை மாதம் தற்கொலை செய்துகொண்டார். ரோட்டரி நிர்வாகிகள் காளி முத்துவின் மனைவி தில்லைக்கு கவுன்சிலிங் அளித்து, அவரது குழந்தை களின் கல்விக்கும் உதவி செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மணலியில் தனது குடும்பத் துடன் வசித்து வந்த பெயிண்டிங் ஒப்பந்ததார ரான நாகராஜன், கடன் வலையில் சிக்கியதால் தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்திற்கும் இந்த திட்டம் உதவியுள்ளது. இந்த திட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை இன்ஃபோசிட்டியின் நிர்வாக ஸ்ரீதர், தற்கொலைக்கான உண்மையான காரணத் தைக் கண்டறிந்து அவற் றைத் தடுப்பதற்கான நிலை யான வழியைக் கண்டறி வதும் இத்திட்டத்தின் நோக்க என்றார்.