districts

சென்னை முக்கிய செய்திகள்

புரோஸ்டேட் பிரச்சனைக்கு அதிநவீன லேசர் சிகிச்சை  முதல்முறையாக சென்னையில் அறிமுகம்

சென்னை மே 31- ஆண்களின் இனப் பெருக்க அமைப்பில் உள்ள  சிறிய சுரப்பியான புரோ ஸ்டேட் சுரப்பி பிரச்ச னைக்கு சென்னை சைதாப் பேட்டையில் உள்ள ஆர்ஜி ஸ்டோன் மருத்துவமனை நானோ ஸ்லிம் லேசர் அறுவை சிகிச்சையை செய்து வருகிறது. இத்த கைய அறுவை சிகிச்சைக்கு  புதிதாக 152 வாட்ஸ் லேசர்  கருவியை அந்த மருத்துவ மனை அறிமுகம் செய்துள் ளது.       முக்கியமான உறுப்பில்  எந்த சேதமும் ஆகாமல் இருப்பதற்காக இந்த நவீன கருவி பயன்படுத்தப்படு கிறது. ஏற்கனவே 100 வாட்ஸ் 120 வாட்ஸ் ஹோல்மி யம் லேசர் கருவி பயன்படுத் தப்பட்டு வந்தது. தற்போது 152 வாட்ஸ் லேசர் கருவியை இத்தகைய சிகிச்சைக்கு அறிமுகப்படுத்தியுள்ள தென்னிந்தியாவிலேயே முதல் மருத்துவமனை ஆர்ஜி ஸ்டோன் என்பது குறிப்பிடத்தக்கது.  இதுகுறித்து மருத்துவ மனையின் சிறுநீரகவியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் அருண்  குமார் கூறுகையில் புதிய தொழில்நுட்பத்தால் நோயாளிகளுக்கு மேம் பட்ட சிகிச்சையை அளிக்க முடியும் என்று கூறினார். மேலும் லேசர் சிகிச்சையால் அறுவை சிகிச்சை நேரமும்  குறைவதோடு நோயாளி யும் விரைந்து குணமாகி இரண்டே நாட்களில் மருத்து வமனையில் இருந்து வீடு  திரும்ப முடியும் என்றும்  அவர் கூறினார். சிறுநீர் பை கட்டிகள், சிறுநீர் குழாய்  அடைப்புகள், இறுக்கமான சிறுநீர் குழாய், சிறுநீர் பை கற்கள் ஆகியவற்றை சரி செய்வதற்கு இத்தகைய சிகிச்சை பெரிதும் பயன் படும் என்றும் அவர் தெரி வித்தார்.  பேட்டியின் போது  சிறுநீரகவியல் துறை ஆலோ சகர் டாக்டர் ஆர்.வீரப்பன், துணைஆலோசகர் டாக்டர் டி.வருண் ஆகியோர் உடனிருந்தனர்

கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர்கள் சாதனை

சென்னை, ஜூன் 1- 22 வாரம் கர்ப்பிணிக்கு ஹைபர் பாரா தைராய்டிசம் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து 22 வாரம் கர்ப்பிணித்தாய் மணிமேகலை (29) என்பவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை பிரிவுக்கு  பரிந்துரைக்கப்பட்டார். அவருக்கு வாந்தி, வயிற்று வலி  மற்றும் கணைய வீக்கம்ஏற்பட்டு அங்கு அனுமதிக்கப் பட்டார்.  அவருக்கு சுண்ணாம்பு சத்து அதிகமாக இருந்ததால் கால்சியம் 14.4 எம்.ஜி. சதவிகிதம், பிடிஎச் 440 பிஜி/எம்.எல்  பிரைமரி ஹைபர் பாரா தைராய்டிசம் இருப்பது கண்டறியப்பட்டது. 4டி-சிடி (CT) பரிசோதனை செய்து சுண்ணாம்பு சத்தை அதிகரிக்கும் கட்டி மார்புக்குள் கண்டறியப்பட்டது. அவர் கர்ப்பமாக இருப்பதால் மிக தீவிர அறுவை சிகிச்சை தேவை என்பதால் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். பாரா தைராய்டு ஸ்கேன் மூலம் அந்த கட்டியின்  இருப்பிடம் மார்பின் ரத்தக் குழாய் அருகில் உள்ளது ஊர்ஜிதம் செய்யப்பட்டது. பின்னர் உரிய தற்காப்புடன் மார்பு எலும்பை பிளந்து அந்த கட்டி முழுவதும் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சையின் போதும், அறுவை சிகிச்சைக்கு பின்பும் ஸ்கேன் மூலம் குழந்தையின் நலம் அறியப்பட்டது. இப்போது தாய் 22 வாரம் கர்ப்பத்துடன் நலமாக வீடு செல்ல உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாஞ்சா நூல் அறுத்து மென்பொறியாளர் காயம்

சென்னை, ஜூன் 1- புழலில் மாஞ்சா நூல் அறுத்து மென்பொறியாளர் காயமடைந்தார். கொடுங்கையூர் காந்தி நகர் காவிரி  சாலையில் வசிப்பவர் திலீப்குமார் (32). மென்பொறி யாளரான இவர், அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திலீப்குமார், வெள்ளிக்கிழமை இரவு பணிமுடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் புழல் மேம்பாலத் தில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல், அவரது கழுத்தை அறுத்தது. விபத்தில் பலத்த காயமடைந்த திலீப்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாநகரப் பேருந்துகளில் அமலுக்கு வந்தது யுபிஐ வசதி

சென்னை, ஜூன் 1- மாநகரப் பேருந்துகளில் ஜிபே உள்ளிட்ட  யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை  மாநகர போக்குவரத்து கழகம் சென்னை முழுவதும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. சென்னையில் மாநகர பேருந்துகளில் தினசரி ஏராளமானோர் பயணம் செய்கின் றனர். பல நேரங்களில் பயணிகள் மற்றும்  நடத்துனர்களுக்கு இடையே சில்லரை பிரச்சனை ஏற்படும். இதையடுத்து மின்னணு டிக்கெட் இயந்திரம் வழங்கப் படும் என்றும், மக்கள் அனைவரும் ஜிபே  போன்ற யுபிஐ மூலம் டிக்கெட் எடுத்துக்  கொள்ளலாம் என்றும் மாநகர போக்கு வரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சோதனை முயற்சியாக கடந்த சில மாதங்களாக ஒரு சில பகுதி களில் மட்டுமே இது செயல்பாட்டில் இருந்து  வந்தது. தற்போது சென்னை மாநகர போக்கு வரத்து கழகத்தின் சார்பில் சமூக வலைத் தளத்தில் எலக்ட்ரானிக் டிக்கெட் இயந்திரம்  செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை முழுவதும் உள்ள 32 டிப்போக் களிலும் எலக்ட்ரானிக் டிக்கெட் எடுக்கும் இயந்திரம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 28ஆம்  தேதி முதல் சோதனை முறையில் அமல் படுத்தப்பட்டு வந்தது. தற்போது முழுமை யாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம் மக்கள்  எளிதாக டிக்கெட் எடுத்து பயணம் செய்ய லாம். டிக்கெட் பெறுவதற்கான யுபிஐ கார்டு பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வது தொடர்பாக நடத்துனர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சமீபகாலமாக சூப்பர் மார்க்கெட் முதல் டீ கடை வரை பெரும்பாலானோர் ஜி பே  என்ற செயலியை பயன்படுத்தி வருகிறார் கள். தற்போது பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன்  மூலம் மக்கள் எளிதில் பயணம் மேற்கொள்ள முடியும், சில்லரை பிரச்சனையும் எழாது.

பாடல் மூலம் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு

சென்னை, ஜூன்1 - மாதவிடாய் குறித்து பெண்கள் மற்றும் மாணவிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரபல பின்னணி பாடகிகள் ஸ்ரேயா கோஷல், சுனிதி சௌஹான் ஆகியோர் பாடல் ஒன்றை பாடியுள்ளனர். இளம் பெண்கள் பள்ளியிலும் கல்லூரியிலும் மற்றும் அலுவலகங்களிலும் மாதவிடாய் காலத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நாட்களைப் போக்கும் வகையில் விஸ்பர் நிறுவனத்துடன் இணைந்து இந்த பாடல்  உருவாக்கப்பட்டுள்ளதாக பாடகி சுனிதி  சௌகான் கூறினார். தற்போதைய காலகட்டத்தில் சிறுமிகளுக்கு எட்டு  வயதிலேயே மாதவிடாய் ஏற்படுவது அதிர்ச்சி அளிப்பதாக  கூறிய அவர் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பள்ளி இடைநிற்றலையும் தடுக்க முடியும் என்று கூறினார்.  மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு இந்தியாவுக்கு மிகவும்  தேவை என்று மற்றொரு பாடகியான ஸ்ரேயா கோஷல்  கூறினார். மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நாட்டில் சுமார் 2 கோடியே 10 லட்சம் மாணவி கள் குறிப்பிட்ட நாட்களில் பள்ளிக்கு செல்வதை தவிர்ப்பதாக வும் சிலர் பள்ளிப்படிப்பை நிறுத்தி விடுவதாகவும்  அவர்  தெரிவித்தார். மாதவிடாய் இயல்பான ஒன்று என்பதை  பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மனதில்  விதைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

பாலியல் வன்புணர்வு:  வாலிபருக்கு 7 ஆண்டு சிறை 

விழுப்புரம், ஜூன்.1- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் பெண் ஒருவரிடம் பாலியல் வன்புணர்வு ஈடுபட்டு, கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி பாக்கிய ஜோதி, “குற்றம்சாட்டப்பட்ட வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார்”. கணவருக்கு 7 ஆண்டு சிறை  மற்றொரு வழக்கில் திருவண்ணாமலை மாவட்டம், வெள்ளகுளம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகள் நிஷாந்தி தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டை சேர்ந்த ராஜசேகர் தான் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜசேகருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், ஜூன்.1- நிறுத்தி வைக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் துவங்கிட வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. தாலுகா செயலாளர் வி.மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் எஸ். பிரகாஷ், மாவட்டத் தலைவர் பி.கணபதி, மாவட்டச் செயலாளர் கே.கே.வெங்கடேசன், விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் டி.கே. வெங்கடேசன், விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.பிரகல நாதன், மாவட்ட நிர்வாகிகள் ஆர். அண்ணாமலை, எஸ். பால சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரை யாற்றினர்.

சென்னையில் 80 வயது மூதாட்டிக்கு ரோபோடிக் உதவியுடன் அறுவை சிகிச்சை

சென்னை, ஜூன் 1   புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகளுக்கு சென்னையில் உள்ள கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவமனை, ரோபோடிக் உதவியுடன்  வெற்றிகரமாக சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளது. ஹைப்பர்தெர்மிக் இன்ட்ரா பெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சை செய்யப்பட்டுள்ளன, தற்போது அவர்கள் 4 பேரும் நலமுடன் உள்ளனர். மேலும் அவர்கள் 4 பேரும் ஆறு மாதங்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். முதல் நோயாளி, சென்னையைச் சேர்ந்த 80 வயதுப் பெண்மணிக்கு, வயிற்றில் புற்று நோய் பரவலுடன் மூன்றாம் நிலை கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. கீமோதெரபியின் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றி, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு அவர் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார். இந்த நிலையில் அவருக்கு மிகவும் சிக்கலான சைட்டோடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வெப்பமான கீமோதெரபியை வயிற்றுத் துவாரத்தில் ரோபோ உதவியுடன் உட்செலுத்தி அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. இது அதிக துல்லியமான சிகிச்சை என்பதோடு நோயாளி வேகமாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இதனை மருத்துவமனையில் புற்றுநோயியல் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ராஜசுந்தரம் தெரிந்துள்ளார்.    இம்மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி அனுராக் யாதவ் கூறுகையில், இந்தியாவில் 80 வயது பெண்ணுக்கு முதல் ரோபோடிக் உதவியுடன் சைட்டோடக்டிவ் அறுவை சிகிச்சை மற்றும் ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிடோனியல் கீமோதெரபி சிகிச்சை அளித்த சென்னையில் உள்ள முதல் மருத்துவமனை எங்கள் மருத்துவமனையாகும் என்றார்.

வீராணம் ஏரியில் ரசாயன கலவை?
சிதம்பரம், ஜூன் 1- கடலூர் மாவட்டத்தில் விவசாயி களின் வாழ்வாதாரமாக விளங்கும் வீராணம் ஏரி. இந்த ஏரியின் நீர் சென்னை மாநகர மக்களின் தாகம் தீர்த்து வரு கிறது. இந்த ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 756 ஆயிரம் ஏக்கர் விவ சாய நிலங்கள் பாசனம் பெற்று வரு கிறது. மேட்டூரில், பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர், கல்லணை வழியாக, கொள்ளிடம் ஆற்றில் கீழணையில் தேக்கப்படும். அங்கி ருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்படும்.  இந்த ஆண்டு போதிய மழை இல்லாத நிலையில், மேட்டூரில் தண்ணீர் இல்லாத காரணத்தால் வீராணம் ஏரியில் நீர் வரத்து இல்லா மல் போனது. ஜனவரி முதல் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது  பின்னர் முற்றிலும் வறண்டு போனது. இதனையெடுத்து, மாற்று ஏற்பாடாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போடப்பட்ட போர்வெல் தண்ணீர், வாலாஜா ஏரி தண்ணீர், என்எல்சி சுரங்க தண்ணீர் ஆகியவை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள கடும், குடிநீர் தட்டுப் பாடை போக்கும் பொருட்டு சென்னை யின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு  வீராணத்தில் தண்ணீர் அனுப்ப, அரசு உத்தரவிட்டது. இதை யொட்டி மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர், கடந்த 25 ஆம் தேதி வீராணம் ஏரிக்கு வந்தடைந்தது. இந்நிலையில், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர், பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சாயக்கழிவுகள் கலந்திருக்கலாம்? என்ற அச்சம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் கூறு கையில்,“  வீராணம் தண்ணீர் இல்லா மல் வறண்டு இருந்த போது பச்சை நிற பாசிகள் இருந்தது. தற்போது ஏரிக்கு குறைவான தண்ணீர் வருவதால் அந்த தண்ணீரில் பாசி கலந்த பச்சை நிறத்தில்  உள்ளது. தண்ணீர் பச்சை நிறத்தில் உள்ளதை கண்டு சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தண்ணீரை மாதிரிக்கு எடுத்து சோதனை செய்துள்ளனர். அதில் தண்ணீரில் எந்த ரசாயன கலவையும் இல்லை தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் வீராணம் தண்ணீர் பச்சை நிறத்தில் உள்ளதை கண்டு அச்சமடைய தேவையில்லை” என்றார்.

100 நாள் வேலை: முழு கூலி வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

திருவண்ணாமலை, ஜூன் 1 நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வழங்கவும் முழு கூலியாக ரூ.319 வழங்கவும் சங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பெரணமல்லூர் ஒன்றியப் பேரவைக் கூட்டத்திற்கு  கே.சேகர் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிவாஜி, பொருளாளர் சத்யா, சந்திரசேகர் ஆகியோர் உரையாற்றினர்.  பெருமாள் (விவசாயிகள் சங்கம்), முருகன் (கட்டுமானம்), பழனி (அறிவியல் இயக்கம்), கௌதம் முத்து (கவுன்சிலர்), பெரணமல்லூர் சேகரன் (சிபிஎம்) உள்ளிட்ட பலர் உரையாற்றினர். சங்கத்தின் தலைவராக சேகர், செயலாளராக திருமாவளவன், பொருளாளராக பாண்டுரங்கன் தேர்வு செய்யப்பட்டனர். நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வழங்கவும் முழு கூலியாக ரூ.319 வழங்கவும் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போரை நிறுத்தவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாக்கு எண்ணும் பணியில் ஆயிரம் ஊழியர்கள்: அதிகாரி தகவல்

புதுச்சேரி, ஜூன்.1- புதுச்சேரி வாக்கு எண்ணும் பணியில்  1,002 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 93 மேசைகள் என மொத்தமாக 105 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 6.30 மணிக்கு பாதுகாப்பு அறையில் இருந்து முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் எடுத்து செல்லப்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு 3 மணி நேரம் ஆக வாய்ப்புள்ளது. மாலை அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும். 12 துணை அதிகாரிகள் மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். கண்காணிக்க ஒரு பொது பார்வையாளர், கூடுதலாக 12 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 4 பிராந்தியத்திலும் கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 1,002 பேர் பணியில் ஈடுபடுகிறார்கள்.  வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். 100 மீட்டர் தொலைவுக்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்படும். மாநிலம் முழுவதும் அனைத்து மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பாதுகாப்பு பணியில் 800 போலீசார் புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாக்கு எண்ணிக்கையின் போது ஒட்டு மொத்தமாக 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். அடையாள அட்டை உள்ளவர்கள் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவர்” என்றார்.


 

;