districts

img

தேசிய சுகாதார இயக்கத்திற்கு கூடுதல் நிதி: ஆஷா ஊழியர்கள் கோரிக்கை

புதுச்சேரி, ஏப். 22- தேசிய சுகாதார இயக்ககத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாநில ஆஷா ஊழியர் சங்க முதல் மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் முதல் மாநாடு ஆலோசகர் ஆர்.கீதா தலைமையில் சனிக்கிழமையன்று (ஏப். 22) நடை பெற்றது. தேசிய சுகாதார அமைப்பு கள் வள மையத்தின் பொது சுகா தார நிபுணர், முன்னாள் நிர்வாக இயக்கு நர் மருத்துவர் டி.சுந்தரராமன் கலந்து கொண்டு பேசினார். சென்னை ஐஐடி பேராசிரியர் கல்பனா கருணாகரன், புதுச்சேரி அரசு செயலாளர் செ.உதயகுமார், சுகா தாரத்துறை இயக்குனர் டாக்டர் ஜி.ஸ்ரீராமுலு, அரசு ஊழியர் சங்கங்க ளின் சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். செயலாளர் வைஜெயந்தி மாலா வேலை அறிக்கையையும், பொரு ளாளர் ஆர்.வள்ளி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். இந்திரா, ரோசி, பிரவீனா உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர். முன்ன தாக சுதேசி பஞ்சாலை அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. தீர்மானங்கள் ஆஷா ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஈஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும். மாதம் ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதி யம் மாதம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும். 45ஆவது மற்றும் 46ஆவது இந்திய தொழிலாளர் மாநாட்டின் பரிந்துரையின் அடிப்படை யில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில், வாழ்வா தாரத்தை பாதுகாக்கும் வகையில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.