districts

img

செஞ்சி வட்ட செயலாளராக ஏ.சகாதேவன் தேர்வு

செஞ்சி,டிச.1-  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர  வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செஞ்சி வட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.   23ஆவது செஞ்சி வட்ட மாநாடு சிங்கவரம் சாலை அருகே ஏ.சின்னசாமி தலைமையில்  நடைபெற்றது,  எஸ்.நெடுஞ்சேரலாதன் கொடியேற்றினார்.   என்.சந்திரசேகர்  வரவேற்புரையாற்றினார், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன்   கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை வி.சிவன் சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கீதா மாநாட்டை வாழ்த்தி பேசினார். செஞ்சி வட்டத்தில்  பழங்குடி மக்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும், இருளர்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் கட்சியின் செஞ்சி  வட்ட செயலாளராக   ஏ.சகாதேவன் தேர்வு செய்யப்பட்டார்.